அன்புள்ள பஞ்ச பட்சி மாணவர்களுக்கு வணக்கம்.
பஞ்ச பட்சி நூலின் விதிகளை அடிப்படையாகக் கொண்டு நோய்க் கணித்தல் என்ற புதிய முறைமையை பதினான்கு வருடம் ஆய்வு செய்து உருவாக்கி ,கடந்த ஆறு ஆண்டுகள் பரன்பரை மருத்துவர், பட்டதாரி மருத்துவர்கள் ,பட்ட மேற்படிப்பு மாணவர்கள்,மாற்று முறை மருத்துவர்களான ஆங்கில மருத்துவர், அக்கு பஞ்சர்,அங்கு பிரசர் மருத்துவர் என அனைவருக்கும் பயிற்சி அளித்து உள்ளோன்.இதற்கு களம் அமைத்து தந்த மூவரை நினைவில் கொள்வது, வள்ளுவத்தை வாழ்வியல் வழக்கத்திற்கு கொண்டுவருதல் எனக்கருதி நண்பர் மரு.சுபானந்தனுக்கும்,அன்பு மருத்துவ இளவல் சேத்தியார் தோப்பு மரு.செயப்பாரகாசுவிற்கும்,உலகம் முழுமையும் இக்கலையை கொண்டு செல்ல உதவி ,களம் அமைத்து தந்து, இன்றும் பல எதிர்ப்புக்கு இடையே இக்கலையை வளர்க்க உதவும் உடன் பிறவா சகோதரர் மரு "K.P.அருச்சுனன் அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.